காதல்
'எங்கே?' என்றேன்
'எங்கும்!' என்றான் என் பிரகலாத நண்பன்.
'எங்குமென்றால்...? எங்கு...?'
'தூண் உன்னிலும்....துரும்பு என்னிலும்'
'இந்த தூணிலுண்டா...?' என் மார்தட்டி சிரித்தேன்.
'உண்டு!' என்றான்.
ஒரு நாள் ஒரு பார்வை கடாயுதம் தாக்கி
தூண் பிளந்தது.
சிலிர்த்து சிலுப்பி எழுந்தது நரசிம்மம்.
பகலோ இரவோ! ஒளியோ இருளோ....
-ஒரு சூன்ய வேளையில்!
உள்ளோ புறமோ ஓர் நிலையற்ற நிலைப்படியில்.
பூமியிலோ ஆகாயத்திலோயன்றி
-ஒரு மிதப்பில்
அன்பின் ஆயுதத்தால் கிழிந்து கிடந்தேன்.
இனிமையாய் இறந்து கிடந்தேன்.
நன்றி நண்பனே பிரகலாதா!
-இரணியன்.
4 comments:
கவிதை அருமையாக உள்ளது !
பின்னூட்டமிடும்போது வரும் word verification ஐ அகற்றிவிடுங்கள். எழுத்துரு மாற்றவேண்டி இருப்பதால் பலர் பின்னூட்டமிடத் தயங்குவார்கள். அதனை அகற்றிவிட்டு comment moderation செய்துவிடுங்கள்.
நீங்களே பாராட்டிட்டீங்க...தன்யனானேன்...ஷெரீப்..!
மற்றும் உங்களது பயனுள்ள ஆலோசனைக்கும்
நன்றி...தொடர்ந்து இந்த வலைப்பதிவை மேம்படுத்த நல் ஆலோசனைகளை வழங்குங்கள்..ஏன்னா...நான் புதுசு...!
சொல்ல வந்த கதை என்னவாயிற்று
Post a Comment