ஆனால்...நிகழ்ச்சியின் இறுதியில் சுபவீ அண்ணன் சொன்னதுதான் எனக்கும் உடன்பாடு.(இதுதான் தலைப்பு)
எனினும்,
கடந்த 4.01.2008 அன்று விஜய் டி.வியில் ' நீயா? நானா ? 'வில் சோதிடம் சம்மந்தமாக நிகழ்ந்த விவாதத்தின் அடிப்படையில் நானும் சில கருத்துகளை முன் வைத்தே தீர வேண்டும். இயற்கை உபாதையைப்போல் தவிர்க்க முடியாதது இது.
பொதுவாகவே டி.விக்களில் விவாத நிகழ்ச்சிகளின்போது சேனலை மாற்றிவிடுவேன் நான். யாராவது தவறாக வாதம் செய்து கொண்டிருக்கும்போது.. வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு கையாலாகத்தனத்தின் உக்கிரத்தில் நரம்புகள் முறுக்கேறி...ரத்தம் தலைக்கேறி...ஆனால் குறுக்கிட முடியாத அவஸ்தை...அது ரொம்ப கொடுமை. அதைவிட சேனல் மாறிப்போய் குத்தாட்டம்போடும் எவளது தொப்புளிலாவது விழுந்து கிடப்பது மேல்.
அது என்னவோ இந்த மாதிரி ஒரு விஷயத்தை நிறுவும் முனையில் அமர்பவர்களில் அரைவேக்காடுகளே அதிகம்.
பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் மறுப்பது சுலபம் .எள்ளி நகையாடி நையாண்டி செய்து மறுத்துப்பேசுவதற்கு பெரிய அளவில் விஷய ஞானமே தேவையில்லை.ஆனால் ஒன்றை நிறுவ முனையும் போது 'நுனிப்புல்'ஞானமெல்லாம் போதாது. காரணகாரியம்-சாட்சிகளுடன் பிரம்ம்பிரயத்தனம் தேவைப்படும். அன்று அவ்வளவு தயாராக யாரும் வராதது சங்கடமாக இருந்தது.
1.ஒரு மருத்துவர் கேள்வி எழுப்பினார்
முதல் சுவாசக்காற்று உள்ளே நுழையும்போது நுரையீரல்-சுவாசப்பாதைகள் பரபரவென்று பிரிந்து வழிவிடும்போது ஏற்படும் ஒருவித எரிச்சலில் அல்லது வலியில்தான் குழந்தை வீறிட்டு அழுகிறது. எனவே குழந்தையின் முதல் அழுகுரல்தான் ‘விதி’நேரம். ஆக மனிதன் அவனது‘விதி’பதிவாகும்போதே அழுகையுடன்தான் அதை பதிவுசெய்து கொள்கிறான்.
அவரே ஒரு இடத்தில் ஒரு கேள்வியையும் எழுப்பினார். நாங்கள் பிரசவம் பார்த்தபிறகு ஆசுவாசமாக (‘டீ’யெல்லாம் சாப்பிட்டுவந்து..) பிரசவ டென்சன்–எல்லாம் குறைந்த பிறகுதான் ஒரு குழந்தையின் பிறப்பு நேரத்தையே எழுதுவோம். அந்த குத்துமதிப்பு நேரத்தைவைத்துக்கொண்டுதான் இவர்கள் சோதிடப்பலனையெல்லாம் சொல்கிறார்கள்.
அடப்பாவி! அப்போ சோதிடம் பொய்த்துபோவதற்கு நாங்களல்ல நீங்கள்தான் முதல் காரணம். சோதிடத்தின் முதல் கயமையே உங்ககிட்ட இருந்துதான் ஆரம்பிக்குதான்னு அவரை மடக்கி எதிர்கேள்வி கேட்க ஆளில்லாமல் போய்விட்டது. அப்புறம் எப்படிய்யா நாங்க சொல்ற பலன் சரியாவரும். அதையே காரணம் காட்டி எப்படிய்யா சோதிடம் பொய்னு வாதாட வேற வந்தேன்னு கேக்க...எதிரணியில யாருமில்லை.
ஆக...மொத்தம் அவங்க அத்தன பேரும் அத்தன ஜோதிட முறையையும் அவங்களே மறுத்துட்டாங்க...என்ன..! அவங்க பகுதிபகுதியா மறுத்தத நாங்க மொத்தமா மறுக்கிறோம் அவ்வளவுதான்! என்றார்..
அதுக்காக பகுதிபகுதியா எல்லாமருத்துவமும் மறுக்கப்பட்டதால நாம மொத்தமா வைத்தியத்தையே மறுத்துவிடமுடியுமான்னு கொஞ்சம் சாமர்த்தியமா .....(வேற வழி?) ஒப்பேத்தியிருக்கலாம். அதையும் யாரும் செய்யல.
இதுக்கிடையில் சூரியன் ஒரு கோளே இல்ல...சந்திரன் ஒரு துணைக்கோள்தான். ராகு கேதுன்னா என்ன? இப்படி சில கேள்விகளுக்கு யாரும் சரியான பதிலே சொல்லலை.
வானமண்டலத்தில் இருக்கிற சூரியன் நிலவு போன்றவற்றால் பூமியில் சில விளைவுகள் ஏற்படுகிறதா இல்லையா? பௌர்ணமி பொழுதில் அலையின் சீற்றமும், அமாவாசை,பௌர்ணமிபொழுதுகளில் மனநிலை குன்றியவர்களிடம் அதிகபட்ச பாதிப்பும் நாம் கண்கூடாக பார்ப்பதுதானே. அதைத்தான் சோதிடத்தில் மதிகாரகன் என்று நிலவை சொல்கிறார்கள். ஏன் நிலவுக்கு ‘மதி’ என்று பெயரே உண்டு. அதுபோல எல்லா கிரகங்களின் தாக்கமும் பூமியில் உள்ள எல்லா பொருள்களிடத்திலும் உயிர்களிடத்திலும் சில பாதிப்புகளை உண்டு பண்ணவே செய்கிறது.
அறிவியல் இதுவரை நிரூபிக்காத விஷயங்கள் அணைத்துமே நம்ப தகுந்ததில்லை என்று கங்கணம் கட்டிக்கொள்ளமுடியாது. இயற்கையின் அதிசயங்களில் 1% கூட அறிவியல் இதுவரை எட்டியிருக்காது. அப்படிபார்த்தால் சென்ற நூற்றாண்டில் ஒலி அலைகள் பொய்,ஒளி அலைகள் பொய், இன்னும் கொஞ்சம் தள்ளிப்போனால் மின்சாரம் பொய், நிறுவப்படாத வரை எல்லாம் பொய்தான். அறிவியல் தொடாத...தொட விரும்பாத.. இயலாத விஷயங்களை புறக்கணித்துவிடமுடியாது...
இப்படி சோதிடம் சார்ந்த விஷயங்கள் நிறைய எழுதிட்டே போகலாம். அதை மறுப்பவர்கள் அனைவரும், அதைத்தான் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். சோதிடம் சொன்ன 7 கிரகங்கள்தான் அதனதன் பெயரிலேயே ஞாயிறு...திங்கள்,செவ்வாய்ன்னு கிழமைகளாய் புழக்கத்தில் இருக்கிறது. அதன் தொகுப்புதான் அதாவது சூரியன் வான்வெளியில் (சோதிடத்தில் 12 கட்டங்கள்) 12 பகுதியாக நகர்வதைத்தான் 12மாதங்களாக அதன் தொகுப்பு வருடங்களாக...யுகங்களாக...so விருப்போ மறுப்போ...அந்த சூழலில்தான் அனைவரும் இருக்கிறோம்.
சரி..இதையெல்லாம் சொன்னாலும்.. எனக்கு, சோதிடம் பார்த்து யாரும் வாழ்க்கை நடத்துவதில் உடன்பாடில்லை.
ஒரு முழுமைபெறாத...யாரும் முற்றிலும் அறிய முடியாத கலையை நம்பி வாழ்க்கையை நடத்தமுடியாது. அதிலும் சோதிடர் என்ற பெயரில் ஏகப்பட்ட புல்லுருவிகள் வேறு.
சோதிடத்தை பார்த்து எதையும் மாற்றிக்கொள்ளவோ திருத்திக்கொள்ளவோ தப்பித்துக்கொள்ளவோ முடியவே முடியாது. பரிகாரமென்பதெல்லாம் சுத்த பேத்தல்.
அதுவும் மாறிவரும் உலகில் கிரகங்களின் கதிர் வீச்சுகளே இங்கிருக்கும் செயற்கை மின்காந்த அலைகளால் ஏகப்பட்ட பாதிப்படைந்து வீரியம் மாறித்தான் போயிருக்கும். நூறு இருநூறு வருடங்களுக்கு முன் சொன்ன பலன் இப்போது ஏகப்பட்ட மாற்றத்துக்குள்ளாகியிருக்கும். ஆனால் நாம் இன்னும் பழம்பஞ்சாங்கமாகத்தான் பலன் சொல்லிக்கொண்டிருப்போம்.
முன்பு கிராமத்தில் ஓட்டு வீட்டிற்குள் பிறந்து விழுந்து முதல் மூச்சை உள்வாங்கிய குழந்தைக்கும் நகரத்தில் ஏகப்பட்ட மின்சார பயன்பாடு...கதிர்வீச்சுகளும் நிறைந்திருக்கும் மருத்துவமனையில் பிறந்து மூச்சை உள்ளிழுக்கும் குழந்தைக்கும் வித்தியாசத்தை யோசித்துப்பாருங்கள்.
கடவுள் பெயரில் தோன்றிய மத்ததின்பெயரால் பல இழிவுகள் தோன்றி... நாசமா போனப்போ எந்த நிபந்தனையுமில்லாம கடவுளையே அடியோடு மறுத்து நாமெல்லாம் உய்ய வழிசொன்ன பெரியார் மாதிரி
இதுல இத மட்டும் எடுத்துக்குவோம் அதுல அத மட்டும் எடுத்துக்குவோம்னு..குழப்பாம எந்த நிபந்தனையுமில்லாம ஒட்டு மொத்தமா சோதிடத்த மறுத்துட்டு வேலையப்பாருங்க...
நான் மேல்சொன்ன விஷயங்கள் ஒரு முழு இலையை பந்திக்கு விரித்து அதில் ஒரு ஓரமாய் உண்ண ஒரு கை சோறு வைத்தமாதிரி சமாளிப்புதான். இலை முழுக்க நரகலை பரிமாறி அதை உண்ணச்சொல்ல..நீங்களும் இங்கே நான் பரிமாறியிருக்கும் ஒரு கைப்பிடிச்சோறுக்காக நரகல் நிறைந்திருக்கும் இந்த இலையில் உட்கார்ந்து சாப்பிட துணிந்துவிடாதீர்கள்...போய் வேலையை பாருங்க...!
9 comments:
வாருங்கள் சிவா..
வலைப்பதிவிற்குள் கால் வைக்கும் தங்களை வருக... வருக.. என்று வரவேற்கிறேன்..
வார்த்தைகள் மிக, மிக, இயல்பாக வந்து விழுகின்றன. வாழ்த்துக்கள்..
ஜோதிடம் பற்றி ஏற்கெனவே வலையுலகில் கோவையைச் சேர்ந்த சுப்பையா என்னும் வலைப்பதிவர் வகுப்பு நடத்தி வருகிறார். தங்களுக்கு நேரமிருந்தால் அங்கு சென்று பார்க்கவும். http://classroom2007.blogspot.com
நன்றி..
அன்பு நண்பருக்கு,பின்னூட்டத்திற்கு நன்றி,தாங்கள் கொடுத்த வலைப்பூ பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.நன்றி..நன்றி...நன்றி....தொடர்ந்து தொடர்பில் இருங்கள்...!
ASTROLOGY IS SIMPLY A BELIEF...WHICH DOSEN'T PRODUCE RESULTS FOR OUR GROWTH...STILL LOTS OF LEARNED PEOPLE BELIEVE THIS...BUT YOUR ARTICLE CONTAINS LOT OF HARSH COMMENTS...LET US LEAVE IT AS IT IS...AND DO OUR JOB WITH SINCERITY...IT IS LIKE GOD...REST WILL TAKEN CARE OF..AGAIN, I WISH TO INFORM.."OPINION DIFFERS"
உங்களைப் போன்ற குழப்ப வாதிகலால்தான் நாடு குட்டிச்சுவராகப் போய்க்கொண்டிருக்கிறது.எதயும் அடித்துச் சொல்ல திராணியில்லாத உங்களைப் போன்றொரின் பொறுப்பற்ற உலரள்களைத் தூக்கி குப்பையில் போடவேண்டும்.மருத்துவத்தையும் ஜொதிடத்தையும் ஒப்பிட்டு பார்த்த உங்களைப் போன்ற அறிவாலிகளை எதைக் கொண்டு அடிபதென்றெ தெரியவில்லை.மருத்துவத்தில்
பல பிரிவுகளிருப்பினும் அவை நிருபிக்கப்பட்ட நிஜம்.ஆதாரம்....,இன்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் (இருதயமாற்று கிட்னிமற்று)
மண்ணுக்கு போகவேண்டிய உயிர்கள் பல இன்னும் இந்த மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கின்றது ஆணால் ஜோதிடம் ஒரு மயிரையும் இதுவரை நிருபிக்கவில்லை என்பதுதான் நிஜம்.
அன்புள்ள துலாம் ராசி நண்பருக்கு வணக்கம்(உங்கள் வலைப்பூவில் ராசியை பதிவு செய்திருக்கிறீர்கள்.பார்த்தேன். இவ்வளவு சொல்பவருக்கு என்ன நம்பிக்கையோ...?)
நீங்கள் விரும்புற மாதிரி 'ம--'ப்புடுங்குற வேலையெல்லாம் சோதிடம் செய்யமுடியாது. சரியாக படித்துப்பார்த்தீர்களேயானால் அதைத்தான் நாகரீகமாக நானும் சொல்லியிருப்பது புரியும். குழப்பற வேலையெல்லாம் நான் செய்யவில்லை. நானும் probability என்ற அடிப்படையில் அதை மறுத்துதான் இருக்கிறேன். அதற்காக சோதிடத்தில் உள்ள logicகளை ஒரேயடியாய் மறுக்கமுடியாது என்பதே என் வாதம். probability தான் சோதிடம். ஏன் நமது வானிலைஅறிக்கையேகூட அப்படித்தான். அதுகுறித்து எத்தனை கிண்டல் நம்மிடையே உண்டென்றாலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழல் மாதிரிதான் சோதிடமும். இயற்கையை அனுமானிப்பதெல்லாம் probability basicல் தான் சாத்தியம். உலகில் எல்லாவிஷயங்களையும் கருப்பு அல்லது வெள்ளை என்கிற ரீதியில் அடித்து சொல்லிவிடமுடியாது. நிறைய -வரும்...ம்...ஆனா...ஆ....வராது -விஷயங்களும் உண்டு.நிற்க,அரைவேக்காட்டு சோதிடர்கள் மட்டுமல்ல அரைவேக்காட்டு விமர்சகர்களும், அநாகரிக (மயிரு)விமர்சகர்களும் கூட கவலை அளிப்பவர்கள்தான்.இதுகுறித்து அன்பர் ராமசுப்பிரமணிய சர்மா எழுதி இருக்கும் பின்னூட்டம் மிகசரியாக உள்ளது.
அன்புள்ள சிவகுமார் அவர்களே,
முதலில் என் கடுமையான விமர்சனத்துக்கு பின்னும் அன்பு பாராட்டிய உங்கள் கனிவுக்கு நன்றி(இன்னாச்செய்தோர் நாண நன்னயம் செய்வதென்பது இதுதானா?) இர்ண்டாவது நன்றி என் bloggerல் தன்னிச்சையாக என் ராசி லிப்ரா என்று பிரா மாட்டி இருப்பது google கைங்கரியத்தால்தான் என்பதை தெரிவிக்கிறேன்
show zodiac sign என்பதை disable செய்ய மறந்துவிட்டேன்.உங்கள் தயவால் சரி செய்துவிட்டேன்.ஜொதிடம் என்பது பூமியை மையமாக வைத்து புனையப்பெற்ற ஒரு அனுமான சாஸ்திரம் அனால் உண்மையில் பூமியும் ம்ற்ற கிரகங்களும் சூரியனைச் சுற்றுகிறது என்பதுதான் நிஜம்.அதனால் ஜொதிடத்தின் அடிப்படைத் தத்துவமெ தவறு என்பது தெளிவாகிறது. ம்ற்றொன்று உலகத்து ஜொதிட தத்துவப்படி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசிப்படி ஒவ்வொரு விதி நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அதுதான் ஞாயமும் கூட, அப்படியென்றால் சுனாமியின் போதும்,பூகங்களின் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இறக்கிறார்களெ அது எப்படி? அவர்களெல்லொரும்
ஒரெ ராசிகாரர்கள் என்று சொல்லப்போகிறதா
உங்கள் உண்மை ஜொதிடம்.ஜொதிடத்தில் ஏதொ லாஜிக் இருப்பதாக வேறு சொல்லீருக்கிறீர்கள் என்ன லாஜிச் என்று விளக்கவில்லை.என்க்கு தெரிந்தவரை ஜொதிடத்தில் லாஜிச் பார்க்கக் கூடாது என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன் அனுமானத்தில் கணிக்கும் ஒரு அரைகுரைச்
சாஸ்திரத்தை அறிவு க்ண்கொண்டு பார்த்து கேள்வி கேளுங்க்ள் என்று சொல்லும் நான்
அரைவேர்காடாகவெ இருந்துவிட்டு போகிறேன்
மனிதனை மூடனாக்கும் ஜொதிடத்தை விமர்சித்ததை(கோபத்தை) அனாகரிகம் என்றால்
நான் நாகரிகம்ற்றவன் என்பதில் என்க்கு மகிழ்ச்சிதான். கடையாக ம்யிரு என்பது கெட்ட வார்த்தை இல்லை சார்,,சந்தேகம் இருந்தால் க்ற்றது தமிழ் படம் பார்க்கவும்
(இன்னா செய்தாரை..)இப்பதான் உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.... கோபக்காரர் எனினும் பண்பாளர்தான் என நிரூபித்துவிட்டீர்கள்...சோதிடம் பற்றி நாம் நேரில் பேசிதான் தீர்த்துக்கொள்ளமுடியும் போலிருக்கிறது. காலம் கனியட்டும். ANYWAY I LIKE YOU! தொடர்ந்து
தொடர்பில் இருங்கள்...நன்றி..!
உங்கள் கருத்து நல்ல இருந்தது , நானும் அந்த நீயா ! நானா ! நிகழ்ச்சியில் இருந்தேன் , நீங்கள் சொல்லுவது சரிதான் , அங்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை ,
நீங்கள் சொல்லுவது போல் நானும் பேச துடித்தேன் , அனால் முடியவில்லை , நானும் ஜோதிடன் ,
ஓம் சந்தோஷ்
நன்றி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஜாதகம் கணிக்கும் சாப்ட்வேர் 10 வகை ஜோதிட சாப்ட்வேர் ஜாமக்கோள் பிரசன்னம் சாப்ட்வேர், கிரகரீதியகா திருமணப்பொருத்தம் பார்க்கும் சாப்ட்வேர், எண்கணிதம் சாப்ட்வேர், பல வகை ஜோதிட சாப்ட்வேர் என்னிடம் கிடைக்கும் ஜோதிடர்களுக்கு மிகவும் துள்ளியமாக பலன் சொல்ல தேவையான அனைத்து வகை ஜோதிட சாப்ட்வேர் என்னிடம் கிடைக்கும்.
என் செல் எண் 8870974887
என் இமெயில் vs2008w7@gmail.com என் இணையதளம் http://psssrf.org.in என் முகவரி ஜோதிட சாப்ட்வேர் டேவலப்பர், குயவர் வீதி, முருங்கப்பாக்கம் , புதுவை (பாண்டிச்சேரி) -605104.
(என் இணையத்தில் ஆன்லைனில் திருமணப்பொருத்தம் பார்க்கும் வசதி உள்ளது இது இலவச சேவை http://psssrf.org.in )
Post a Comment